சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசிக மாவட்ட செயலாளர் காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்கியதாக கையில் காயத்துடன் பெண் எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோமநாதபுரம் காவல்நிலையத்திற்கு சென்ற விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன், அவர் அளித்த புகார் மனு தொடர்பாக அங்கு பணியாற்றி வந்த பெண் எஸ்.ஐ பிரணிதாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.