விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் பொற்கொல்லர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தஞ்சை காசுக்கடை தெருவில் பொற்கொல்லர்கள் விஸ்வகர்மா ஜெயந்தியை கொண்டாடினார்கள். விஸ்வகர்மா படத்திற்கு மாலை அணிவித்து, பொற்கொல்லர்கள் நகை வேலை செய்ய பயன்படுத்தி வரும் உபகரணங்களை படம் முன்பு வைத்து, பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட பொற்கொல்லர்கள் ரத்ததானம் வழங்க பதிவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.