சென்னையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோவை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரண்டு கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்