தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கம்பைநல்லூர் மற்றும் பாலக்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கொங்காரப்பட்டி, காடுசெட்டிபட்டி, பஞ்சப்பள்ளி, சூடானூர், மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி செடிகளில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதலால் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.