ராமநாதபுரம், மண்டபம் பகுதியில் கள்ளக்காதலியை சந்திக்க சென்று விட்டு, அவரது அக்காவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மீனவர், கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து மீனவரின் ஆணுறுப்பில் கொட்டி, துடிதுடித்து இறந்ததை பார்த்து, தாயும் மகளும் தங்களது ஆத்திரத்தை தீர்த்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே முத்தரையர் நகரை சேர்ந்தவர் மீனவர் வெள்ளைச்சாமி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியிடம் போதையில் தகராறில் ஈடுபட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில், வெள்ளைச்சாமி மட்டும் மீன்பிடி தொழிலை செய்து குடியும் கும்மாளமுமாய் தனியே வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.மீன் பிடிக்கும் தொழிலின் போது வெள்ளைச்சாமிக்கு பழக்கமானவர் தான் மீன் வியாபாரியான காளீஸ்வரி. இவரும் தனது முதல் கணவரை இழந்து, இரண்டாவது கணவரை பிரிந்து தன்னந்தனியே வாழ்க்கையை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான், இருவரும் வியாபாரத்தின் போது அறிமுகமாகி ஜோடி சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே திரைமறைவில் வாழ்க்கை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துவிடுவது போலதான் வெள்ளைச்சாமி - காளீஸ்வரியின் காதலும் காலப்போக்கில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. காளீஸ்வரியின் காதலால் எரிச்சலடைந்த அவரது தாயாரும் அக்காவும் வெள்ளைச்சாமியை கண்டாலே ஆத்திரத்தை கொட்டி தீர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தலைக்கேறிய காம போதையில் காளீஸ்வரியை தேடி அவரது அக்கா மாலதி வீட்டிற்கு சென்றிருக்கிறார் வெள்ளைச்சாமி.அச்சமயம் காளீஸ்வரி வீட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால், காமம் வெள்ளைச்சாமியின் கண்ணை மறைக்க, காளீஸ்வரி என நினைத்து அவரது அக்கா மாலதியை கட்டியணைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாலதியின் தாய், குடுகுடுவென ஓடிச்சென்று குளிப்பதற்காக அடுப்பில் போடப்பட்ட வெந்நீரை எடுத்து அவரது ஆணுறுப்பில் ஊற்றி கதற வைத்திருக்கிறார். உடல் வெந்து வெள்ளைச்சாமி துடிதுடித்த போதிலும், ஆத்திரம் தீராத மாலதியின் தாய் வீட்டுக்கு வெளியில் இருந்த கடப்பா கல்லை கொண்டு வந்து அவரது தலையிலேயே போட்டு கொலை செய்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து பதறியடித்து ஓடிவந்த காளீஸ்வரி வெள்ளைச்சாமியின் நிலைகண்டு நிலைகுலைந்து போயிருக்கிறார். விரைந்து வந்த போலீசாரும் மாலதி மற்றும் அவரது தாயார் ராக்கம்மாளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.