சிவகங்கை மாவட்டத்தில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவின் போது விதிகளை மீறி சென்றதாக 28 பேர் மீதும், 23 வாகனங்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் மரியாதை செலுத்த சென்ற போது அத்துமீறியதாக 28 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 23 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.