விழுப்புரம் நகராட்சியில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சிலப்பதிகாரம் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. சேறும் சகதியுமாக காணப்படும் கழிவு நீரால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதால், கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.