திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முயல் வேட்டைக்கு சென்ற ஆறு பேரை வனத்துறையினர் பிடித்து அழைத்து செல்ல முயன்றதை கண்டித்து, கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னாங்கண்ணிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்குள்ள வனப்பகுதியில் முயல்வேட்டைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவையொட்டி முயல்வேட்டைக்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் சென்ற நிலையில், ஆறு பேரை வனத்துறையினர் பிடித்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. வனத்துறையினரை சிறைப்பிடித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆறு பேரும் விடுவிக்கப்பட்டனர்.