இராணிப்பேட்டை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் கள் படையல் வைக்கும் திருவிழா நடத்திய கிராம மக்கள், கள் நிரம்பிய குடங்களுடன் பறை இசை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். ”கள் எங்கள் உரிமை" என்று கோஷமிட்டவாறு நடனமாடியபடி சென்றவர்கள், கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.இக்கிராமத்தில் கள் எடுப்பது பிரதான தொழிலாக இருந்து வந்த நிலையில், அது சட்டவிரோதம் என்பதால் சமீபத்தில் கள் இறக்கும் தொழிலாளர்களை கைது செய்த போலீசார், கள் இறக்குவதற்காக கட்டப்பட்டிருந்த பானைகளையும் அகற்றினர். இதனை கண்டித்து திருவிழா நடத்திய கிராம மக்கள், கள் தவறான பொருள் என்று நிரூபித்தால் 20 லட்சம் தருவதாக சவால் விடுத்தனர்.