பொன்னேரி அருகே தலைமுறை கடந்து வாழ்ந்து வரும் 70 குடும்பங்களுக்கு, குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் 70 குடும்பங்களுக்கு, குடிமனை பட்டா வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் முற்றுகை, சாலை மறியல், ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை சான்றிதழ்களை ஒப்படைத்தல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், ஏலியம்பேடு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் கருப்பு கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொன்னேரி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் சோமசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக அளவீடு செய்து, இந்த மாத இறுதிக்குள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.