தருமபுரி அருகே ஏரியில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வெங்கட்டம்பட்டி கிராமத்தில் கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கிய ஏரியில், சில விஷமிகள் ஏதோ கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கும் மக்கள், ஏரியை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.