திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் உள்ள கருவண்ராயர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் உடுமலை - மூணார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வழிபாடு நடத்திய கோயிலில், தனிநபர்களின் தூண்டுதலால் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், சம்பந்தப்பட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.