நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் வெட்டாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்படுவதை எதிர்த்து 32 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்ற நிலையில் ஆட்சியர் வளாகத்தின் நுழைவு வாயிலை தள்ளிக் கொண்டு விவசாயிகள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.