ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே மது கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நெமிலி - ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனப்பாக்கம், தென்மாம்பாக்கம் கிராமத்தையொட்டி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப் பகுதியில் மதுக்கடை அமைந்தால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்ப்படும் எனக்கூறி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியல் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.