ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோளிங்கர் நகராட்சியை விரிவாக்கம் செய்யும் நோக்கில் பாண்டியநல்லூர் மற்றும் சோமசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து அரசு அறிவித்தது. ஆனால் நகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும் எனவும், பஞ்சாயத்து அந்தஸ்தை இழந்தால் 100 நாள் வேலை கிடைக்காது எனவும் குற்றம்சாட்டி, நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே இரு கிராம மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.