திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கிராவல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரடிப்புத்தூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் குவாரி அமைக்க மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதையடுத்து 15 லாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் கிராவல் மண் எடுக்கும் பணி தொடங்கிய நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைபிடித்தனர்.