ஈரோடு மாவட்டம் சாணார்பாளையத்தில் மின்மயானத்துக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட மறுத்த கொளப்பலூர் பேரூராட்சி தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாணார்பாளையத்தில் 1 கோடியே 73 லட்ச ரூபாயில் மின்மயானம் அமைக்க 9 குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மின்மயான திட்டத்தை ரத்து செய்வதாக, எழுத்து பூர்வமாக உறுதியளிக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம் கையொப்பமிட மறுத்து கூட்டத்தை விட்டு வெளியேற முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.