செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நூற்றாண்டு விழா காணும் அரசு பள்ளிக்கு, கிராம மக்கள் ஒன்று கூடி மேசை, நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் என 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசையாக வழங்கினர். வீராணகுண்ணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா, மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி உள்ளிட்டவற்றுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர்ணம் பூசி, வாழை தோரணங்கள் கட்டி அழகாக அலங்கரித்திருந்தனர். முன்னாள் மாணவர்கள் சிலர் தாங்கள் படித்த பள்ளியிலேயே, தங்கள் பிள்ளைகளையும் சேர்த்து மகிழ்ந்தனர்.