மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே புதிதாக அமைக்கப்படவுள்ள கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருமால் கிராமத்தில் உள்ள குராயூர் கண்மாய் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து பூமி பூஜை போட்டது. இதற்கு குராயூர், மோச்சிக்குளம், மருதங்குடி, பாறைகுளம், புதுப்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட 36 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு கிராம மக்கள் ஒன்றுகூடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.