திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஏரிக்கரை கிராமத்தில் ஆழ்கிணறு அமைக்காமல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டியதால் கிராம மக்கள் குடிநீருக்காக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தின் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு வரவேண்டிய நீர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு திருப்பிவிடப்படுவதாக கூறப்படும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் கொட்டிய கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி