திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே 95 லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டியும், முறையான சாலை வசதி இல்லாததால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது. நங்காளி, கீரக்களூர், புஞ்சையூர் உள்ளிட்ட பத்து கிராம மக்கள், திருத்துறைப்பூண்டி நகருக்கு செல்ல வசதியாக, தோளாச்சேரி கிராமத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாலத்தை இணைக்கும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள செம்மண் சாலை கருங்கற்கள் கொட்டப்பட்டு கரடு முரடாகவும், முள்செடிகள் மண்டியும் உள்ளதால், தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையும் பாருங்கள் - மஞ்சள் கலரில் குடிநீர், கொந்தளித்த கிராம மக்கள் | Viluppuram News