கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மயானத்திற்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பிளியம்பட்டியை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த தனியார் பாதையில் தற்போது விவசாயம் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் மயானத்திற்கு செல்ல பயன்படுத்தும் ஓடை சேரும் சகதியுமாக உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இறந்தவரின் சடலத்தை வீட்டிலேயே வைத்துவிட்ட வந்த பொதுமக்கள் மயானம் செல்ல நிரந்தர பாதை கோரி தரகம்பட்டி சாலையில் போராட்டம் நடத்தினர்.