கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வீரமலை ஊராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிக்கல் கிராமத்தில் உள்ள தார்சாலை சேதமடைந்ததால் கடந்த 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய சீரமைப்பு பணி, சாலை உள்ள நிலம் தங்களுக்கு சொந்தமானது என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கரடு முரடான சாலையில் செல்ல சிரமப்படுவதாக கூறி ஊர்மக்கள் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.