திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் பொதுமக்கள் நள்ளிரவில் ONGC அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியலிலும் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூடி, நில உரிமையாளர்களிடமே திருப்பி வழங்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு திடீரென 2 கன்டெய்னர்களில் ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.