சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் தலையாரி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியங்குடியை சேர்ந்த பாண்டி, தனக்கு சொந்தமில்லா நிலத்திற்கு அடங்கல் கேட்ட போது, அதனை விஏஓ தர மறுப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறி, தலையாரி கார்த்திகை ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது.