விஜயின் அரசியல் வருகை, இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் லாபகரமாக இருக்கும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை என்றும், தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் எனவும் கூறினார்.