தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் முன்னாள் மேலாளர் செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த செல்வகுமார், சுறா வில்லு, போக்கிரி உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பிஆர்ஓவாகவும் பணியாற்றியுள்ளார். செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த சுமார் 100 பேரும் அவருடன் சேர்ந்து, திமுகவில் இணைந்தனர்.