மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே படப்பிடிப்புக்காக வந்த விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்த இயக்குநர் பொன்ராம், கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.இந்தநிலையில், சொந்த ஊரான பூச்சிபட்டியில் படப்படிப்பு நடத்துவதற்காக இயக்குநர் பொன்ராம், நடிகர்கள் சண்முக பாண்டியன், சரத்குமார் வந்தனர்.அவர்களுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.