தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை குஷிப்படுத்துமே தவிர, அரசியலுக்கு ஒத்து வராது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு இரு மொழி கொள்கையே போதும் என்றும், ஹிந்தியை திணிக்கவில்லை என கூறி விட்டு வரும் காலத்தில் ஹிந்தி திணிப்புதான் நடைபெறும் எனவும் கணித்துள்ளார்.