நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் குழந்தைக்கு கணியன் என பெயர் சூட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளராக பதவி வகித்து வரும் குமரன் என்பவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மனைவி, குழந்தையுடன் விஜய் சேதுபதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜய் சேதுபதி, குழந்தைக்கு கணியன் என அழகான தமிழ் பெயரை சூட்டினார்.