சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். வெள்ளை லுங்கி, வெள்ளை சட்டை மற்றும் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அணிந்து பங்கேற்ற விஜய்,இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நோன்புக் கஞ்சி அருந்தி, நோன்பு திறந்தார்.