அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்லமாட்டார் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்றும், அதிமுக அழைப்பை விஜய் ஏற்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.