தவெக தலைவர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த ரசிகரை, பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி முனையில் பிடித்தனர். என்ன நடந்தது?நாமக்கல், கரூர் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தனது நீலாங்கரை வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டார். அவரது விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்ததும், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அப்போது விமான நிலையத்திற்குள் ஒருவர் வேகமாக வந்தார். பார்ப்பதற்கு விமான நிலைய ஊழியர் போல் இருந்த அந்த நபரை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், அவர் மீது சந்தேகப்பட்டு பிடித்தன.ர் அந்த நபரை சோதனை செய்ததில் விமான ஊழியர் என சொல்லப்பட்ட அவர் தனது கழுத்தில் டேக் மட்டுமே போட்டிருந்தார். ஆனால், அதில் ஐடி கார்டு இல்லை. இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அதில், அந்த நபர் விமான நிலைய ஊழியர் இல்லை என்றும், விஜய் ரசிகர் என்பதும், விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான நிலைய ஊழியரை போல் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை துப்பாக்கி முனையில் பிடித்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்து அனுப்பினர். விஜய் பின்னால் யாரும் செல்ல வேண்டாம், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரித்தும், அதை பொருட்படுத்தாத தவெகவினர் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை செய்து வருகின்றனர்.