சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக திடல் தயார்சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link தவெக சேலம் மீட்டிங், திடலுக்குள் Checking தீவிரம்