தமிழ்நாட்டில் 18 சதவீதம் வாக்குகளை பெற்று, தேர்தலை சந்தித்து, தேர்தல் களத்தில் தான் உள்ளோம் என்றும், தேர்தல் களத்தில் இல்லை என்று விஜய் அவரையே கூறிக்கொள்வதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், திமுக ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், விஜய் திமுகவை எதிர்ப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார்.