மயிலாடுதுறையில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அக்கட்சி நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் விஜய் ஒலிபெருக்கி மூலம் பேச உள்ளதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், மாவட்டங்களில் கடந்த 13ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். 2ஆம் கட்டமாக வரும் 20ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொள்கிறார்.