தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதி கழிவறையில் உயிரிழந்த மாணவன் விக்னேஷ் உடல் 11 நாட்களுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கல்லூரியின் விடுதியில் தங்கி 3 ம் ஆம் ஆண்டு படித்து வந்த நெல்லையை சேர்ந்த மாணவன் விக்னேஷ் விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தான். மகனின் உடலை வாங்க மறுத்தும், பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில கோரிக்கைகளை வைத்தனர். அதனை ஏற்று காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் மாணவன் உடல் கூராய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நல்லடக்கத்திற்காக உடல் சொந்த ஊரான நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.