விஜயதசமியை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாலீஸ்வரர் கோவிலில் குழந்தைகளும் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமியில் கல்வியை தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம் என்பதால் இந்த கோவிலுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதையடுத்து கோவில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் ஓம் என எழுதியும், பச்சரிசியில் அகர முதல எழுத்துகளை எழுத வைத்தும் கல்வியை தொடங்கி வைத்தனர்.