விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் ஹரி ஓம் என எழுதியும், அரிசியில் அ என எழுதியும் கல்வி துவக்கி வைக்கப்பட்டது. விஜயசதமியில் குழந்தைகளின் கல்வி கற்றலை துவங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.