பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்தில் 2 வழக்கறிஞர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆய்க்குடி கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பேச்சுவார்த்தைக்குச் சென்ற பெரம்பலூர் வழக்கறிஞர்கள் இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டனர்.