தனக்கு எதிராக வீடியோ வெளியிட்டவர்களை கண்டித்து சென்னை வளசரவாக்கம் மண்டலக் குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன், அதிகாரிகளிடமும் மனு அளித்தார். மண்டலக் குழு கூட்டத்தில் சத்தியநாதனுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றபோது, அவர் கண்ணை மூடியதை வீடியோ எடுத்து, குறட்டை விட்டு உறங்குவதாக இணையத்தில் வெளியிட்டனர்.