உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் TNPSC வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டதை வீடியோ பதிவு செய்து, சமூக ஊடங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக சக வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், மூத்த வழக்கறிஞர் வில்சன் வழக்கு விசாரணையின் போது நியாயமற்ற, கடுமையான மற்றும் அவதூறான வார்த்தைகளையும், வரம்பு மீறிய சிக்கலான சூழலையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண தவறினால் நீதித்துறையின் நேர்மைக்கு குந்தகம் ஏற்படும் என கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனைத்து வழக்கறிஞர்களையும் மரியாதையுடன் நடத்தும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.