திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத பைக்கில் இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்ட நிலையில், அதனை உடன் சென்ற நபர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.