கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் காவல் நிலையத்தின் அருகே ஒருவரை 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடூரமாக அடித்து ரத்தம் சொட்ட சொட்ட இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பலவாணன் பேட்டை பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர், பைக்கில் சென்ற போது சாலையின் நடுவே நின்றிருந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் முருகவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் 16 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.