ராமநாதபுரத்தில், இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்று பாம்பன் பாலத்தின் மையத்தில் இருந்து கடலில் குதித்த வீடியோ வெளியாகியுள்ளது.ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான செயலில் ஈடுபட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து இதுபோன்று அபாயகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.