சென்னை போரூர் அருகே கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. மெளலிவாக்கம் பகுதியில் மதுபானக்கடை அமைக்கப்பட்டு, அங்கு அதிகாலை முதல் படுஜோராக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இங்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படும் மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர்.