ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மீன் குஞ்சுகளை மக்கள் பாத்திரத்தில் பிடித்து வைத்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது வைரலாகி வருகிறது. கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய் தண்ணீர் உள்ளே புகுந்ததால் குடிநீரில் மீன் குஞ்சுகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.