வேலூரில் தீர்த்தகிரி மலைக்கு வரும் காதல் ஜோடிகளை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். காதலர்கள் தனிமையில் இருப்பதை நோட்டமிட்டு, அவர்களிடம் பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுவது தொடர்பாக இரு நபர்கள் பேசிக்கொள்ளும் ஆடியோ லீக் ஆனது. இதுகுறித்து விசாரித்த போலீசார், அய்யனார், விநாயகம் ஆகியோரை கைதுசெய்தனர்.