சிதம்பரத்தில் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு ராட்சத முதலைகள் மோதிக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரியும் உப்பனாறு வாய்க்காலில் 500க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாய்க்காலில் இறங்கும் பொது மக்கள், ஆடு, மாடுகளை முதலைகள் கடித்து கொன்று வருவதாக மக்கள் அச்சமடைந்திருக்கும் நிலையில், முதலைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் பொது மக்கள் இறங்க வேண்டாமென வனத்துறை எச்சரித்துள்ளனர்.