கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து, ஆள் சேர்த்தது அம்பலமாகியுள்ளது. திமுகவின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டம் முடிந்ததும் திமுக பிரமுகர் ஒருவர் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.